மார்ச் 4 – வரலாற்றில் இன்று!

LTTE_AntonBalasingham1493 – கடலோடி கொலம்பஸ் அமெரிக்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.

1665 – இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.

1813 – நெப்போலியனுடன் போரிட்ட ரஷ்யப் படைகள் ஜேர்மனியின் பேர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.

1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.

1917 – ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.

1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

1938 – விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் பிறந்தார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.

2001 – போர்த்துக்கலில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் உயிரிழந்தனர்.

2006 – அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top