டோனியுடன் ஒப்பிடாதீர்கள் நான் வித்தியாசமானவன்- வீராட் கோலி

201506031656397613_Dont-compare-me-with-Dhoni--Im-different-Virat-Kohli_SECVPFஆஸ்திரேலிய சுற்றுபயணத்தின் போது வீராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்று கொண்டார். இடையில் பலவேறு விமர்சனங்களுக்கு கோலி உள்ளனார்.முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் ஒரு பேட்டியில் கோலி  கேப்டன் டோனியிடம் இருந்து அதிகம் கற்று கொள்ள வேண்டும் என கூறினார்.பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோலி மிகவும் உண்ர்ச்சி வசப்படுகிறார் அவர்டோனி போல் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி இருந்தனர்.

இந்த நிலையில்  ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் வீராட் கோலி கூறி இருப்பதாவது:-

கேப்டன் டோனியுடன் ஏன் ஒப்பீடு செய்கிறீகள்? நான் வித்தியாசமான குணம் கொண்டவன். நான் வேறு சுபாவத்தை கொண்டவன்.உலகம் முழுவதும் அணித் தலைவராக  நிலையாக இருக்க சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். மிகவும் உணர்ச்சியுடன் இருக்க கூடாது. தடித்த தோலுடன் விளையாட்டில் என்ன நடக்கிறது  உற்று நோக்குபவராக இருக்க வேண்டும். யாருடைய ஆலோனைகளாலும் என்னை மாற்றமுடியாது. நான் யாருக்காகவும் என்னை மாற்றி கொள்ள முடியாது.ஆனால்  யாரும் எனக்காக மாற்றி கொள்ளலாம்.

இது ஒரு சிறிய விஷயம்  நான் என்னை மேம்படுத்த வேண்டும்.ஆனால் ஒரு கேப்டனாக இருக்கும் போது ஆதிக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற உள்ளூணர்வு உள்ளது.முன்பிருந்த இந்தியாபோல் சாதிப்பது மிகவும் எளிதல்ல.இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி செய்ததை போல் செய்ய நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top