உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெற அதிபர் புடின் உத்தரவு!

ukraine pudinஉக்ரைனின் கியவ் நகருக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வரவிருக்கும் நிலையில் அங்கிருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெற அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கியவில் உள்ள கிரிமீயா நகரை சுற்றிவளைத்த ரஷ்ய படையினர், அவர்களை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் வீரர்களை எச்சரிக்கும் ரீதியாக வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் கிரிமீயாவில் உச்சபட்ச பதற்றம் நீடித்துவந்தது.

இந்நிலையில், உக்ரைன் புதிய அதிபரை சந்திப்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கெர்ரி அங்கு விரைந்துள்ளார்.உக்ரைனின் புதிய தலைமையை ஏற்க முடியாது என்றும் உக்ரைனை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள விக்டர் யனுகோவிச்தான் அதிகாரப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்றும் ரஷ்ய பிரதமர் மெத்வெதேவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top