அமெரிக்காவில் மக்களை விட ராணுவத்தினரிடம் மனநோய் அதிகரிப்பு

bc47add7-daaf-4450-90ce-50622bd93c65_S_secvpfஅமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைகளில் இரு பிரிவினருக்கும் இடையே காணப்படும் நோய் விகிதங்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் மூத்த எழுத்தாளரும், ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பேராசிரியருமான ரொனால்ட் கெஸ்லர் ராணுவத்தினரிடையே பெரும்பான்மையாகக் காணப்பட்ட மனத்தளர்ச்சி பொதுமக்களைவிட ஐந்து சதவிகிதம் அதிகமாகவும், இடைப்பட்ட சமயங்களில் வெடிக்கும் தன்மை கொண்ட கோளாறு ஆறு மடங்கு அதிகமாகவும், மனஉளைச்சலுக்குப் பிந்தைய சீர்கேடு 15 சதவிகிதம் அதிகமாகவும் காணப்பட்டதாக ஹார்வர்ட் செய்தி ஒன்றில் மேற்கோள் காட்டியுள்ளார்.

தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களிலும் 25 சதவிகிதத்தினர் மன நோய் சோதனைகளில் சாதகமான முடிவையே பெற்றிருந்தார்கள். அதிலும் 11 சதவிகிதத்தினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தததாக கெஸ்லரின் ஆய்வு குறிப்பிடுகின்றது.

தற்கொலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 14 சதவிகிதத்தினர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்துள்ளனர். 5.3 சதவிகிதத்தினர் தற்கொலை பற்றித் திட்டமிட்டுள்ளனர். 2.4 சதவிகிதத்தினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

மொத்தத்தில் இந்த மூன்று அறிக்கைகளிலும் ராணுவம் மற்றும் மனநோய் பற்றி ஒரு குழப்பமான வெளியீடுகளே காணப்படுவதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. ராணுவத்தினரிடையே அதிகரித்துக் காணப்படும் தற்கொலை முயற்சிகளுக்கான விபரங்கள் தெளிவாக அறியப்படவில்லை. எனினும், தாங்கள் வெளியிட்டுள்ள இந்த விபரங்கள் ராணுவப் பணிக்கு வருவோருக்கான நலத் திட்டங்களை மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top