தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருமாவளவன் சந்திப்பு

63235cb7-3acc-4f9b-a8fd-34197670cd20_S_secvpfவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்டு செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனை நேற்று சந்தித்து பேசினார். கூட்டணி ஆட்சிக்கு உரிமை கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்தை திருமாவளவன் சந்தித்து பேசினார்.

காலை 11 மணிக்கு தொடங்கிய சந்திப்பு 12 மணி வரை நீடித்தது. இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

வருகிற ஜூன் 9–ந்தேதி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. அந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவர் நாளை தனது பதிலை தெரிவிப்பதாக கூறினார். இனிவரும் காலங்களில் கூட்டணி ஆட்சி முறைதான் வரவேண்டும்.

ஒரு கட்சியில் ஒரு எம்.எல்.ஏ. இருந்தால்கூட அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும். உத்தரபிரதேசம் இதற்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

மத்திய அரசில் 40 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சியே நடந்து வருகிறது. ஜனதா கூட்டணி, தேசிய முன்னணி கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முறையே தொடர்ந்து வருகிறது.

கடந்த மாதம் விஜயகாந்த் தலைமையில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தோம். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அவரிடம் அப்போது தெரிவித்தோம். அதுகுறித்து மத்திய அரசு ஏதும் தெரிவித்துள்ளதா என்று விஜய காந்திடம் கேட்டேன்.

ஐ.ஐ.டி. மாணவர் பிரச்சனை குறித்து விவாதித்தோம். வாக்கு வங்கிக்கு மட்டும் கூட்டணி சேராமல் கூட்டணி ஆட்சியிலே பங்கு வேண்டும் என்பது குறித்து அவரிடம் வலுசேர்த்து பேசினேன். இதுபற்றி 2 கம்யூனிஸ்டு தலைவர்களிடமும் பேசியுள்ளேன். அவர்கள் கருத்தரங்குக்கு வருவதாக கூறியுள்ளார்கள்.

இன்று இரவு 7 மணிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்திக்க இருக்கிறேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்கும் எண்ணம் இல்லை.

இந்த கருத்தரங்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வுக்கு எதிரானது அல்ல. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்காகத்தான் இந்த கருத்தரங்கை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top