பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட ஜோ. மரிய டெலக்ட் நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதம்

unnamed (1)பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட அளவில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான
பணி மூப்புப் பட்டியலில் கடந்த 14 ஆண்டுகளாக சிதம்பராபுரத்தைச் சேர்ந்த ஜோ. மரிய டெலக்ட் முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியப் பணியிடத்தில் இவரை முறைப்படி நியமனம் செய்ய 11.05.2015 அன்று மறைமாவட்ட கல்விக் குழு ஏகமனதாக முடிவு செய்தது. 12 குருக்கள் பங்கேற்கும் இக்கல்விக் குழுவால் அக்காலியிடத்தில் நியமனம் செய்ய இவர் பெயர் இறுதி செய்யப்பட்ட பின்னர் ஏதோ குளறுபடிகள் நடந்துள்ளன. அவ்விடத்திற்கு மரிய டெலக்ட்டை நியமனம் செய்யாமல் அப்பள்ளியில் பணியாற்றும் வேறு ஒரு ஆசிரியையை திடீரென்று நியமனம் செய்யப்போவதாக முடிவாகி உள்ளது. இதனைக் கண்டித்து பாளை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நீதி கேட்டு இன்று (30.05.2015) இவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கி உள்ளார்.
பாளை கத்தோலிக்க மறை மாவட்டத்தில் ஆவுடையானூரில் உள்ள புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மட்டுமே அரசு உதவி பெறும் ஒரே மேல்நிலைப் பள்ளியாகும். எனவே மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அதாவது முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நேரடி நியமனமாக முதுகலை பட்டதாரி ஆசிரியரை நியமிப்பது என்பதனையே கல்விக் கொள்கையாக வகுத்துள்ளனர். அதன் படியே பணி நியமனம் நடைபெற்றும் வந்துள்ளது. உதாரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆவுடையானூர் புனித அருளப்பார் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பட்டதாரி ஆசிரியரை பதவி உயர்த்துவதை மறுத்து நேரடி நியமனமாக முதுகலை பட்டதாரி ஒருவரே வரலாறு ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டனர்.
11.05.2015 அன்று நடந்த கல்வி குழுக் கூட்டத்தில் வேதியியல் பாட முதுகலை பட்ட ஆசிரியர் நியமனம் தொடர்பாக கலந்து ஆலோசிக்கும் பொழுது பட்டதாரி ஆசிரியரை பதவி உயர்த்தும் வி~யமும் பேசப்பட்டு அது மறை மாவட்ட கல்வி கொள்கைக்கு எதிரானது. முதுகலை பட்டதாரியே நேரடி நியமனமாக நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 12 குருமார்களும் சேர்ந்து ஒருமித்து வேலை வாய்ப்பு பதவி மூப்பு அடிப்டையில் முதலிடத்தில் இருந்த சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜோ. மரியடெலக்ட் அவர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்யதுள்ளனர்.
மரிய டெலக்ட் தனது கணவர் மைக்கேல் ராஜ் உடன் சென்று சங்கரன் கோவில் பங்கு தந்தை ஜேம்ஸ் அவர்களை 15.05.2015 அன்று சென்று சந்தித்து ஆவுடையானூர் பள்ளியில் பணி நியமனம் குறித்து விசாரித்தார். அப்பொழுது பங்குத் தந்தை கடந்த 11.05.2015 அன்று நடைபெற்ற கல்வி குழு கூட்டத்தில் உனது பெயரே ஒரு மனதாகதேர்வு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு தகவல் வரவில்லையா? இன்றோ அல்லது நாளையோ வரக்கூடும் என்று கூறியுள்ளார்கள்.

இதன் அடிப்படையில் மறை மாவட்ட முதன்மை குரு திரு. ஜோமிக்ஸ் அவர்களை மறு நாள் பணி நியமனம் குறித்து தொடர்பு கொண்டனர். ஜோமிக்ஸ் அடிகளார் அந்தப் பணிக்கு அப்பள்ளியில் 5 வருடங்களாக வேலை செய்யும் ஆசிரியருக்கு பதவி உயர்வு கொடுக்க இருப்தாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசுகையில் 27.05.2015 அன்று நடைபெற உள்ள கல்வி குழு கூட்டத்தில் பணி நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்.
இதனால் குழப்பம் அடைந்த மரிய டெலக்ட் கல்விக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து பங்கு தந்தைகள் பொறுப்பு வகிக்கும் குருமார்களை தனது கணவருடன் சென்று சந்தித்துள்ளார். அவர்கள் அனைவருமே 11.05.2015 கல்விக் குழு கூட்டத்தில் ஆவுடையானூர் மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு மரிய டெலக்ட் பெயரே ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
27.05.2015 அன்று நடைபெற்ற மறை மாவட்ட கல்வி குழு கூட்டத்திலும் கல்விக் குழு உறுப்பினார்கள் பெரும்பாலானவர்கள் ஆவுடையானூர் பள்ளி பணியிடத்தில் மரிய டெலக்ட்டையே நியமனம் செய்ய வேண்டும். அதுவே மறை மாவட்டத்தின் கல்வி கொள்கை என்பதையும் சுட்டிக் காட்டி வலியுறுத்தினர். ஆனால் மறை மாவட்ட முதன்மை குழு ஜோமிக்ஸ் அடிகளார் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார்.
முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள ஆயர் மேதகு ஜுடு பால்ராஜ் அவர்கள் வெளிநாடு சென்று விட்டச் சூழ்நிலையில் இன்று முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ள மறை மாவட்ட முதன்மைக்குழு
ஜோமிக்ஸ் அவர்கள் மறை மாவட்டக் கல்வி கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

சங்கரன் கோவில் வட்டத்தைச் சார்ந்த கிராமமான சிதம்பராபுரத்தில் கடந்த ஆண்டில் பங்கு சாமியாருக்கு எதிராக பிரச்சனை ஒன்று நடந்தது. அது சமயம் சிதம்பராபுரம் பங்கைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் பிரச்சனையை மறைமாவட்ட ஆயர் கவனத்தில் கொண்டு வந்த பொழுது ஜோமிக்ஸ் அடிகளார் ஊர் மக்கள் மீது தேவையற்ற கோபத்தை வளர்;த்துக் கொண்டார். இந்த அடிப்படையிலேயே சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மரிய டெலக்ட் அவர்களுக்கு முறையாக வர வேண்டிய பணி நியமனத்தை தடுத்து நிறுத்த கல்வி கொள்கைகளுக்கு விரோதமாகவும் பெரும்பாலான கல்விக் குழு உறுப்பினருக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

சிதம்பராபுரம் ஊர் மக்கள் தங்களது ஊர்த் தலைவருடன் சென்று ஆயர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் மறைமாவட்ட பங்கு குருவான ஜோமிக்ஸ் அவர்களை சந்தித்து தங்களது கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு நியாயமாக முறையாகக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பினை வழங்குமாறு விண்ணப்பித்துக் கொண்டனர். அதற்கு ஜோமிக்ஸ் அடிகளார் 15.05.2015 அன்றே அப்பணியிடத்திற்கு நியமனம் செய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளார்.

27.05.2015 அன்று கல்விக் குழு கூட்டத்திலும் பெரும்பாலான கல்விக் குழு உறுப்பினர்கள் மரிய டெலக்ட் தேர்வு செய்ய வேண்டும் என்று பணியிட நியமனம் குறித்துப் பேசப்பட்ட சூழலில் அதற்கு முன்னரே எவ்வாறு பணி நியமனம் நடைபெற்றிருக்க முடியும? அவ்வாறு பணி நியமனம் நடைபெற்றுள்ள சூழலில் ஏன் அதனை கல்விக் குழு உறுப்பினர்களிடம் கூறவில்லை? நியாயமாக ஆசிரியப் பணி நியமனம் நடைபெறவில்லை என்பதனையே இது காட்டுகிறது.
அத்துடன் பாளை கத்தோலிக்க மறை மாவட்டப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் போன்றவை வெளிப்படையாக நடைபெறுவது இல்லை. சமூக நீதி பேச வேண்டிய ஆயர் முதன்மை குருக்களே கள்ள ஆடுகளாய் பணத்திற்காகப் பதவிகளைää பணியிடை மாற்றங்களை விற்பதும் நடைபெற்று வருகின்றது.

மறை மாவட்ட கல்விப் பணி நியமனம் தங்களுக்கு முறைப்படி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி முதுகலை பட்டதாரிகள் ஆசிரியப் பயிற்சி முடித்து பதிவு செய்து அப்பாவித் தனமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 14 வருடக் காத்திருப்பு அதுவும் பதவி மூப்பில் முதல் இடத்தில் இருந்து கொண்டு 14 வருடங்களாக காத்திருப்பது என்பது சாதாரண வி~யம் அல்லவே. அப்பெண்ணிற்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி மிகக் கொடுமையானது. அதையும் அவர்களையே நம்பியிருக்கும் கிறித்துவ மக்கள் மீது கத்தோலிக்கக் குருமார்களே அநீதி இழைப்பது கவலை தரக் கூடியது. 14 ஆண்டுகள் காத்திருந்த மரிய டெலக்ட்டிற்கு நியாயமாகவும் முறையாகவும் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை பாளை மறைமாவட்ட நிர்வாகம் அநியாhயமாக திட்டமிட்டு மறுக்கிறது. மறைமாவட்ட ஆயர் வெளிநாட்டில் இருப்தைக் காரணமாகச் சொல்லி வரும் ஜுன் 1ம் தேதியே அப்பள்ளியில் வேலை செய்யும் பட்டதாரி ஆசிரியரை பணியிடத்தில் நிரப்புவதற்கான மறைமுகமான வேலைகளை மறைமாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு செய்து வருகிறது. இந்த அநீதி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!
சிறு பான்மை மக்களுக்கென இந்திய அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளை பாளையங்கோட்டை மறைமாவட்ட நிர்வாகம் முற்றிலும் தவறாகப் பயன்படுத்துகிறது. பணி மூப்புப் பட்டியலில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஏழை எளிய கிறிஸ்தவ பட்டதாரிகளுக்கு மறைமாவட்ட நிர்வாகம் முறையாக நியாயமாக பணி மூப்புப் பட்டியல் அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஜோ. மரிய டெலக்ட்டுக்கு நீதி வழங்கிட ஆயரும் மறைமாவட்ட நிர்வாகமும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. பங்கு கோவில் பங்கு தந்தை ஊர் பெயர் அஞ்சல் முகவரி தேவை

Your email address will not be published.

Scroll To Top