வடபழனியில் விபத்து மெட்ரோ ரெயில் தொழிலாளர்கள் 3 பேர் பலி

METRO-RAIL-ACCIDENTநேற்று நள்ளிரவு , வடபழனி திருநகர் பஸ் நிறுத்த பகுதியில் மெட்ரோ ரெயில் மேம்பாலபணி நடைபெற்று வந்தது. 4 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி  டேங்கர் லாரி ஒன்று சென்றது. அது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை  இழந்து தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி சாலை தடுப் பில் இடித்து நின்றது.

இதில் தொழிலாளர்கள் சத்திரியன் (60), சங்கர் (35) ஆகிய 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.படுகாயம் அடைந்த . ஆதிநாராயணன் (40), கிருஷ்ணன் (37) ஆகிய 2 தொழிலாளர்கள்  அரசு மருத்துவமனியில் சேர்கபட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஆதி நாராயணன் சிகிச்சைபலனளிக்காமல் பலியானார்.  விபத்தில் பலியான 3 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top