இந்தியாவில் இந்த ஆண்டு வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

இந்த ஆண்டு இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயில் கொடுமைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். நேற்று வரை இந்தியாவில் வெயிலின் கொடுமைக்கு 2,005 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 1,979 பேர் இறந்துள்ளனர். ஒடிசாவில் 17 பேர் பலியாகி உள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 7 பேரும், டெல்லியில் 2 பேரும் இறந்துள்ளனர். டெல்லி, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களிலும் அனல் காற்று வீசுகிறது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top