சென்னை மெட்ரோ: சுரங்கம் தோண்டும் பணி பாதிப்பு

SHENOY-NAGARசென்னை சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை டிஎம்ஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கேமன் நிறுவனம், இம்மாதம் 17ம் தேதியளவில் மாஸ் மெட்ரோ நிறுவனம் விட்டு சென்ற பணியினை துவங்கியது. எனினும் இப்பணிகளில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தினால், தற்போது கேமன் நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளது.

அதனையடுத்து பழைய வண்ணாரபேட்டை – சென்ட்ரல் இடையே சுரங்கம் தோண்டும் பணியினை மேற்கொள்ளும் அப்கன்ஸ் நிறுவனத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அணுகியுள்ளது.

சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை டிஎம்ஸ் இடையேயான 2838 மீ தூரத்தில் சுமார் 2530 மீ சுரங்கபாதை அமைக்கும் பணிகளானது முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மிச்சமுள்ள தூரத்தில் முடிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே சென்னையில், மெட்ரோ ரயில் இயக்கம் தாமதமாகும் வேளையில், சுரங்கப் பதை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது பின்னடைவாக கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top