எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் நிறைவு

vitcounselling15513எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்திலுள்ள 19 அரசு மருத்துவ கல்லூரிகளிலும்‌, ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் இந்த விண்ணப்பங்களைப் பெறலாம்.

பொதுப்பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயாகும். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் இலவசமாக விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பிறப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கிடைக்காதவர்களும் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்கள் கிடைத்த உடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என அரசு மருத்துவ கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை செயலர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை தவிர்த்து தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இருப்பினும், சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நாளை வரை பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top