இலங்கையில் மோசடி தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு ராஜபக்சே மனைவிக்கு சம்மன்

97589961-d9fd-4f2f-8b8b-ba3c09a42075_S_secvpfஇலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவை விசாரணைக்கு வருமாறு அந்நாட்டு நிதி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

வரும் ஜூன் 1-ம் தேதியன்று நிதிமோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகவேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலிய சவிய என்ற அமைப்பின் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே சிராந்தியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக சிராந்தி செயல்பட்டு வந்துள்ளார்.

சிராந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் சிறிசேனா அரசு தங்கள் குடும்பத்தை சித்ரவதை செய்ய முயல்வதாக நமல் குற்றம் சாட்டியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top