மலேசியாவில் 28 கடத்தல் முகாம்களும் – 139 கல்லறை தளங்களும் கண்டுபிடிப்பு: போலீஸ் அதிர்ச்சி தகவல்

Untitledதாய்லாந்து நாட்டு எல்லையை ஒட்டியுள்ள மலேசிய நிலப்பரப்பில் நேற்று 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று எலும்புக்கூடுகள் தோண்டப்பட்ட வடக்கு மலேசிய எல்லைப்பகுதியில் 139 கல்லறை தளங்களும், 28 கடத்தல் முகாம்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார். கண்டுபிடிக்கப்பட்ட 139 கல்லறை தளங்களிலும், எத்தனை சடலங்கள் உள்ளது பற்றி எதுவும் கூறமுடியாது என்று மலேசிய காவல்துறை தலைவர் காலித் அபுபக்கர் கூறினார்.

கடத்தல் முகாம்கள் ஒவ்வொன்றிலும் 300 பேர் வசித்து வருவதாகவும் காலித் மேலும் கூறியுள்ளார். நேற்று அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களும், தற்போது கடத்தல் முகாம்களில் வசிப்பவர்களும், மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களாக இருக்கலாம் என பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top