ஆசிரியை கண்டித்ததால் தீக்குளித்த மாணவி சாவு

825e97fe-5cdf-4816-ad4a-d6681fa9cd22_S_secvpfதிருவொற்றியூர் அப்பர்சாமி கோவில்  தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பவித்ரா (வயது 14). திருவொற்றியூர் விம்கோ அரசு   ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனை வகுப்பு ஆசிரியை  கண்டித்து பவித்ராவின் பெற்றோரை அழைத்து தெரிவித்தார். வீட்டுக்கு சென்றதும் அவர்கள் பவித்ராவை கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த அவர் கடந்த 27-ந் தேதி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பெற்று வந்த பவித்ரா இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top