சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகின்றன

CBSE-Class-12-exam-results-released-today_SECVPFசி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்க்கலாம்.

24300699 (டெல்லி), 011–24300699 (இதர பகுதிகள்) ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு, ஐ.வி.ஆர்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவுகளைப் பெறலாம். எம்.டி.என்.எல். தொலைபேசி சந்தாதாரர்கள், 28127030 (டெல்லி), 011–28127030 (இதர பகுதிகள்) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தேர்வு முடிவுகளை அறியலாம். இதுதவிர, சில செல்போன் சேவை நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை தெரிவிக்கும் வசதியை அளிக்கின்றன என்று சி.பி.எஸ்.இ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top