12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவக்கம்.

plus two examதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கியுள்ளன.இந்த தேர்வுகளை மொத்தம் ஒன்பது லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை நடக்கும் 12ம் வகுப்பு தேர்வை, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 6 ஆயிரத்து 4 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இதில், 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 மாணவர்களும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 829 மாணவிகளும் அடங்குவர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிக்கூட மாணவர்களை தவிர தனித் தேர்வர்கள் 53 ஆயிரத்து 629 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் சென்னை புழல் சிறையில் இருந்து 58 சிறைவாசிகளும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இத் தேர்வுகளை எழுத 2 ஆயிரத்து 242 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு விடைத்தாளில் சிறிது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பக்கத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண்களையோ, பாடங்களையோ எழுத வேண்டியதில்லை. அனைத்தும் விடைத்தாளில் அச்சிட்டே வழங்கப்படுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களின் கையெழுத்தை மட்டும் முதல் பக்கத்தில் பதிவு செய்தால் போதும்.

தேர்வில் காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும என்று தேர்வு துறை எச்சரித்துள்ளது. தேர்வுகளை கண்காணிக்க தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், தேர்வு மையங்களை பார்வையிட சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top