சென்னை எம்.கே.பி நகரில் மீண்டும் தீ விபத்து: பொதுமக்கள் பீதி

fireசென்னையில் உள்ள மகாகவி பாரதி நகரில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது இதில், மேலும் இரண்டு குடிசைகள் தீயில் எரிந்து சேதமானது. அடுத்தடுத்து தொடரும் தீ விபத்துகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

சென்னை எம்.கே.பி நகரில் இன்று அதிகாலையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் எஞ்சியிருந்த 2 குடிசை வீடுகளும் தீயில் கருகின. கடந்த வாரம் அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட தீ விபத்தில், 100-க்கும் அதிகமான குடிசைகள் எரிந்து சாம்பலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கு மட்டும் தொடர்ந்து தீ விபத்துக்கள் ஏற்படுவது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த 8 வருடங்களுக்கு முன்னரும், தீ விபத்து காரணமாகத்தான், எம்.கே.பி நகரில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு விரைவில் மாற்று இடம் வழங்கப்படும் என மாநில வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து எம்.கே.பி நகரில் எத்தனை குடும்பங்கள் வசித்தன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், இன்றுக்குள் இப்பணிகள் நிறைவடையும் எனவும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கணக்கெடுப்பு பணிகள் ஏதும் அங்கு நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top