ஆஸ்திரேலியா அருகே சாலமன் தீவுகளில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

earthquakeஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் சாலமன் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. கடந்த 20–ந்தேதி அங்கு 6.9 ரிக்டரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் ஹோனியரா உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.

இந்த நிலையில் இன்று மீண்டும் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் தலைநகர் ஹோனியராவில் இருந்து 448 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கிராகிரா அருகே 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு அதே பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் உருவானது.

இதனால் கிராகிரா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 தடவை வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 2 முறையும் 6.8 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பசிபிக் மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. கடந்த 2013–ம் ஆண்டில் இங்கு 8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் உருவான சுனாமியில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top