தமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் ஆய்வு – மோசமாக உள்ள பஸ்களை இயக்க தடை

school busதமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் தணிக்கை நடைபெற்று வருகிறது. மோசமான பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி பஸ்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். அவசரகால வழி இருக்க வேண்டும், படிக்கட்டுகள், இருக்கை வசதியாக இருக்க வேண்டும், முதலுதவி பெட்டி, தீயணைக்கும் கருவி உள்ளிட்டவை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்தின்போதும் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளி பஸ்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் மணப்பாறை தாலுகா பள்ளி பஸ்கள் நேற்று ஆய்வு நடந்தது. ரங்கம் கோட்டாட்சியர்(பொறுப்பு) திருமலைச்சாமி தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் சொர்ணலதா, மெட்ரிக் ஆய்வாளர் வசந்தா, இன்ஸ்பெக்டர் முகமது ரபீக் ஆகியோர் முன்னிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் மணப்பாறை மோட்டார் ஆய்வாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர்.

பஸ்களை இயக்கி, ஸ்டியரிங், பிரேக் போன்ற செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். இதில், மிகவும் மோசமான நிலையில் இருந்த மூன்று பஸ்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டன. இவற்றை இயக்க இயலாது. சிறு பழுதுகள் கண்டறியப்பட்ட 25 பஸ்களை முற்றிலும் பழுது நீக்கியபின் மணப்பாறை ஆர்டிஓ பகுதி நேர அலுவலகத்தில் ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டன. இதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 பஸ்களும் முழுவதும் பழுது சரிசெய்தபின் திருச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆய்வுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.இதேபோல் தமிழகம் முழுவதும் பஸ்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படுகின்றன. மோசமான பஸ்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாதத்துக்குள் ஆய்வு முடியும்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top