பாட்னாவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு!

bihar-police-11பீகார் தலைநகர் பாட்னாவில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

ராஜிவ் நகரில் உள்ள அந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால், அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறினர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வேறெங்கும் குண்டு வைக்கப்பட்டிருக்கிறதா என்று சோதனை நடத்தினர். வெடிகுண்டு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top