ஐபிஎல் கிரிக்கெட்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

rcbராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது. அந்த அணியில், டி வில்லியர்ஸ் மற்றும் மந்தீப் சிங் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். 38 பந்துகளை சந்தித்த டி வில்லியர்ஸ், 4 சிக்சர், 4 ஃபோர்களை விளாசி 66 ரன்களை குவித்தார். இதேபோல், மந்தீப் சிங்கும் 34 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார்.

இதையடுத்து 181 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே மட்டும் பொறுப்புடன் விளையாடி 42 ரன்களை எடுத்தார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சினால் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் மற்றும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்தனர்.

இதனால் 19 ஓவர்களியே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து பெங்களூரு அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடடுன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நாளை மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top