10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

sslc10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை10 மணி அளவில் வெளியானது. அரசு தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in என்ற இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் மறுகூட்டலுக்கு வரும் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மறுகூட்டல் செய்வதற்கு தலா 205 ரூபாய் முதல் 305 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 29 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் விநியோகிக்கப்பட உள்ளன. தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் அடுத்த மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top