நாற்பது தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் பிரச்சாரத்தை துவங்க அ.தி.மு.க திட்டம்!

Jayalalithaதமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தினைத் துவங்க திட்டமிட்டுள்ளது.

முன்னதாக 40 தொகுதிகளுக்கும் ஒட்டு மொத்தமாக வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இதுவரை இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறது. முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று துவக்குகிறார்.

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தை துவங்கும் நேரத்தில் பாண்டிச்சேரி உட்பட மற்ற 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டுமென அதிமுக திட்டமிட்டுள்ளது. எனவே தலைமையின் திட்டப்படி இன்று 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top