ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம்: பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

kohli-smith-splitஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ரவுன்ட் எனப்படும் வெளியேற்றுச் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புனேவில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.

வெற்றி பெறும் அணி, இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்கொள்ளும். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.

அதில் இரு அணிகளும் தலா 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top