சதுரகிரி காட்டாற்று வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்வு!

sathuragiriவிருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

முதலைக்கேணி பகுதியில் இருந்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது உடலும், தூத்துக்குடி புதியம்புத்தூரைச் சேர்ந்த முப்பிடாதி என்பவரது உடலும் மீட்கப்பட்டன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சதுரகிரி மலை உச்சியில் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் தீயணைப்பு துறையினரும், கிராம பகுதிகளில் வருவாய்துறையினரும் முகாமிட்டு தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி தாணிப்பாறை காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சதுரகிரி மலையில் சிக்கியிருந்த அனைத்து பக்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

காட்டாற்று வெள்ளம் முற்றிலுமாக வடிந்திருந்தாலும் இன்று வரை சதுரகிரி மலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top