அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு!

tamilnadu-secretariat-old-buildingஅரசு விளம்பரங்களில் முதல்வர் படங்களை பிரசுரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மாநில முதல்வர்கள் படங்களை பிரசுரிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், அரசு விளம்பரம் குறித்து பிறப்பித்த உத்தரவை மனுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “மத்தியில் பிரதமர் செயல்படுவது போல் மாநிலத்தில் முதல்வர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசின் திட்டங்கள் அனைத்தையும் முதல்வரே செயல்படுத்துகிறார். பிரதமர் படம் இடம்பெறுவது போல் முதல்வர் படமும் இடம் பெற வேண்டும் “என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top