பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வழியிலும் அனுமதிக்க மாட்டோம்: சிறிசேனா

maithripala-sirisenaநாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வழியிலும் இடம் தரமாட்டோம் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்தார்.

இலங்கையில் தேசிய படை வீரர் நினைவு அணிவகுப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்த தருணத்தில் போரில் உயிரிழந்த முப்படையின் வீரர்களையும் நினைவு கூர்வதாகவும், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வழியிலும் அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், தலைமை நீதியரசர், சமய தலைவர்கள். அரசு மற்றும் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top