சதுரகிரி காட்டாற்று வெள்ளம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

sathuragiriவிருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் காட்டாறு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

முதலைக்கேணி பகுதியில் இருந்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது உடல் இன்று மீட்கப்பட்டது. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தூத்துக்குடியைச் சேர்ந்த தந்தை, மகனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சதுரகிரி மலை உச்சியில் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் தீயணைப்பு துறையினரும், கிராம பகுதிகளில் வருவாய்துறையினரும் முகாமிட்டு தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன் தினம் தாணிப்பாறை காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சதுரகிரி மலையில் சிக்கியிருந்த அனைத்து பக்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். காட்டாற்று வெள்ளம் முற்றிலுமாக வடிந்திருந்தாலும் நாளை வரை சதுரகிரி மலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top