மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து இன்று ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்!

stop frackingமீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் தோள் கொடுத்து நின்று தொடர்ந்து போராடுவோம் என்றும் ஏற்கனவே நலிந்து உள்ள விவசாயத்தை மேலும் பாழுங் கிணற்றில் தள்ளும் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

நீர்வளம், மண் வளம், விவசாய நிலவளம், சுற்றுசூழல் மக்கள்; வாழ்வாதாரத்தை ஒழித்தழித்து தமிழகத்தை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சமி தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top