ஐ.பி.எல். கிரிக்கெட்: பிளேஆப் சுற்றுக்கு நுழைந்த 4 அணிகள் ஒரு கண்ணோட்டம்!

3eb989bd-94e7-453e-8c74-7b82d48e2553wallpaper1ஐ.பி.எல். போட்டியில் நேர்த்தியாக விளையாடும் அணிகளில் முதன்மையானது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான இந்த அணி 2 முறை (2010, 2011) கோப்பையை வென்றுள்ளது. 3 முறை 2–வது இடத்தை பிடித்தது. இதுவரை நடந்த அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதி மற்றும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைந்த ஒரே அணியாகும்.

இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான், கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லி அணிகளிடம் தோற்றது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் திகழ்கிறது.

புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தன் மூலம் இறுதிப்போட்டியில் நுழைய 2 முறை வாய்ப்பு இருக்கிறது.

ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்தில் 4 ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோற்றது. அதில் இருந்து மீண்டு தொடர்ச்சியாக 5 போட்டியில் வெற்றி பெற்றது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. 2–வது இடத்தை பிடித்ததன் மூலம் இறுதிப்போட்டிக்கு நுழைய சென்னையை போல 2 முறை வாய்ப்பு பெற்றுள்ளது. ‘பிளேஆப்’ முறை 2011–ல் அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னையை போலவே மும்பை அணியும் 5–வது முறையாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 2011–ம் ஆண்டு சாம்பியனான மும்பை அணி சமபலத்துடன் திகழ்கிறது.

சிறந்த வீரர்களை கொண்ட பெங்களூர் அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது இல்லை. 2011–ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான்‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அந்த அணி தற்போது 3–வது இடத்தை பிடித்து முன்னேறி உள்ளது.

எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுவதால் தோல்வி அடைந்தால் வெளியேற்றப்படும். சிறந்த பேட்டிங் வரிசையை கொண்ட அணியாகும்.

கடந்த முறை மயிரிழையில் ‘பிளேஆப்’ வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த முறை கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலம் 4–வது இடத்தை பிடித்து வாய்ப்பை பெற்றது.

அறிமுக ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி இந்த தொடரில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பின்னர் சரிவு ஏற்பட்டது. அதன்பிறகு மீண்டது கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது. 2–வது முறையாக ‘பிளேஆப்’ சுற்றில் ஆடுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top