டேவிட் மில்லர் அடித்த சிக்ஸரால் காவலர் பார்வை இழப்பு

357662-david-miller-kxip-hit-700ஐ.பி.எல். போட்டியின் போது பஞ்சாப் வீரர் டேவிட் மில்லர் அடித்த சிக்ஸரால் காவலர் ஒருவரின் பார்வை பறிபோயிவுள்ளது.

கடந்த 9-ம் தேதி நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது ரசிகர்களால் ’கில்லர் மில்லர்’ என அழைக்கப்படும் டெவிட் மில்லர் அடைத்த சிக்ஸர் பந்து மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின் வலது கண் பகுதியில் தாக்கியது.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கண் பார்வை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் கொல்கத்தா கிரிகெட் வாரியத்தின் இணை செயலாளருமான கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக மில்லரை குற்றம் சொல்ல கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top