நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

nakkeeran-gopalநக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த 15 அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நக்கீரன் பத்திரிகையில் அவதூறாகச் செய்தி வெளியிட்டதாகக் கூறி அதன் ஆசிரியர் கோபால் மீது 15 அவதூறு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

இதை எதிர்த்து கோபால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்பிரிவுகளும் இவ்வழக்கில் தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவற்றுடன் இந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 15 வழக்குகளையும் உயர் நீதிமன்றம் விசாரிப்பதற்‌குத் தடை விதித்து உத்தரவி‌ட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top