என்கவுன்டர் செய்து விடுவதாக கேரள போலீசார் மிரட்டினார்கள்: நீதிபதியிடம் மாவோயிஸ்டு ரூபேஷ் புகார்

roobaisகோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில் திருச்சூரைச் சேர்ந்த மாவேயிஸ்ட் கட்சி தலைவர் ரூபேஸ் (வயது 40), அவரது மனைவி ஷைனா (35), மற்றும் அனூப் (40), கண்ணன், ஈஸ்வரன் ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கடந்த 4 ந் தேதி கைது செய்தனர்.

பின்னர் கோவை நிதீமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்யப்பட்ட மாவேயிஸ்ட்களை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சுப்பிரமணியன் தமிழ்நாடு கியூ பிராஞ்ச் போலீசார் காவல் விசாரணைக்கு 10 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கியூ பிராஞ்ச் போலீசார் கோவை போலீஸ் பயிற்சி மைதானத்தில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூரில் 2 வருடம் ரூபேஸ், ஷைனா தங்கியிருந்தது உள்பட பல்வேறு தகவல்களை கூறினர்.

இந்தநிலையில் மாவோயிஸ்டுகளின் 10 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை இன்றுடன் முடிந்தது. இதனால் கைதான மாவோயிஸ்டுகள் 5 பேரையும் கியூ பிராஞ்ச் போலீசார் இன்று கோவை மாவட்ட முதன்மை நிதீமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர்களிடம் நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்காள? என்று நீதிபதி கேட்டார்.

அப்போது ரூபேஷ் நான் போலீஸ் காவலில் இருந்த போது கேரள கியூ பிரிவு போலீசார் என்னை மிரட்டினார்கள். விசாரணை என்ற பெயரில் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று என்கவுண்டர் செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள். எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
ரூபேசின் மனைவி சைனா நீதிபதியிடம் கூறும்போது விசாரணையின் போது கேரள கியூ பிரிவு போலீசார் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர். எனது மகள்களையும், தாயாரையும் கைது செய்து விடுவோம் என்று மிரட்டினர் என்றார்.

வீரமணி கூறும்போது விசாரணையின் போது கர்நாடக போலீசார் வெற்று பேப்பரில் என்னிடம் கையெழுத்து போடுமாறு வலியுறுத்தினார்கள். நான் மறுத்துவிட்டேன். என்கவுண்டர் செய்வதாக மிரட்டினார்கள் என்றார். இதேபோல் ஆந்திர போலீசார் என்னை மிரட்டினார்கள் என்று அனூப் கூறினார். கண்ணனும் போலீசார் தன்னை மிரட்டினார்கள் என்று கூறினார்.

அதன் பின்னர் 5 பேரையும் வருகிற 3–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top