குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

Karunanidhiமத்திய அரசின் குழந்தைத் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப பாரம்பரியத் தொழில்கள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு சார்ந்த பணிகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஈடுபடுத்தலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்திருத்தத்தால், தினமும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறார்கள் படிப்பில் ஆர்வம் செலுத்தாமல், வேலைக்கு செல்லும் நிலை உருவாகும் என கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும், சிறார்களின் அடிப்படைக் கல்வி உரிமையை பறித்து எதிர்காலத்தை இருண்டதாக ஆக்கிவிடும் என விமர்சித்துள்ள கருணாநிதி, குழந்தைத் தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை கட்டாயம் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத்தொழிலில் குழந்தைகளை ஈடுபட அனுமதித்தால், அவர்களது விளையாட்டு மற்றும் ஓய்வு பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் சில திருத்தங்கள், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் இருப்பதால் அவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top