பொதுப்பணித்துறை ஊழல் பெயர்ப்பட்டியல் வெளியிட்ட விவகாரம்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு

tamilnadu-secretariat-old-buildingதமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்களில் 10 பேர் மீது ஊழல் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உகந்தவையா என லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒப்பந்ததாரர்கள் அளித்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 10 பேரின் பெயர்ப்பட்டிலை அண்மையில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் ஒப்பந்ததாரர் சங்கத்தினர், வெளியிட்டனர்.

லஞ்சப்புகார் குறித்து ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் புகாரும் அளித்துள்ளனர். அதில், ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகக் கூறி அதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. புகாருக்குள்ளான அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top