ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: மும்பை – கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை

mumbai_bcci030515ஐ.பி.எல். போட்டியின் 51–வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா? சாவா? நிலையாகும். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி அடைந்தால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

அந்த அணி 12 ஆட்டத்தில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலை மும்பை இந்தியன்சுக்கு உள்ளது. மிகவும் முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும்.

போல்லார்ட், கேப்டன் ரோகித்சர்மா, லெண்டில் சிம்மன்ஸ், அம்பதிராயுடு ஆகியோரது ஆட்டத்தை பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு இருக்கிறது.

நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தி ‘பிளேஆப்’ சுற்றில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி 12 ஆட்டத்தில் 15 புள்ளியுடன் 2–வது இடத்தில் உள்ளது. மும்பையை வீழ்த்தினால் கொல்கத்தா ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். கேப்டன் காம்பீர், உத்தப்பா, ரஸ்சல், யூசுப் பதான் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top