நேபாளத்தில் இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரம்

நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

nepal-earth_quake

செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், அடுத்தடுத்து ஏற்படக்கூடிய தொடர் நில அதிர்வுகளால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் தொடர்ந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தின் டோலக்கா மற்றும் சிந்துபால்சௌக் ஆகிய மாவட்டங்கள் செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. டோலக்கா மாவட்டத்தில் பல வீடுகள் இடிந்து தரை மட்டமாகி உள்ளதாகவும், அம்மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் உள்துறை அமைச்சர் பாம் தேவ் கௌதம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியால் பல இடங்களில் மீட்புப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top