ஐபிஎல் கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதல்!

rcb-team_1305bcci_630ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி. 10 போட்டிகளில் தோல்வியடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 13 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய போட்டிகளில் பஞ்சாப் அணியே அதிக முறை வெற்றி கண்டுள்ளது. நேருக்கு நேர் மோதியுள்ள 15 போட்டிகளில் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top