இலங்கையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் குற்றசாட்டு

121231313212மகிந்த அரசின் ஊழல் சாம்ராஜ்யத்தில் சொத்துக் குவித்தவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். மைத்திரி அரசிற்கு முன்னைய அரசுகள் அனைத்தோடும் ஒட்டிக்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் மக்களின் அவலத்தை முன்வைத்துப் பிழைப்பு நடத்திய வரலாறு கறைபடிந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் இராணுவத் தளபதியாக ஆயுதமேந்திப் போராடிய டக்ளஸ் தேவானந்தம் அந்த இயக்கம்விட்டு பிரிந்து சென்றார். ஈ.பி.ஆர்.எல் இல் இணைந்த போராளிகளில் பலர் போக்கிடமின்றி டக்ளஸ் உடன் இணைந்து கொண்டார்கள். இந்தப் பலத்தை முன்வைத்து கொழும்பில் பேரினவாத அரசுகளோடு ஒட்டிக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் வாக்குப் பொறுக்கிகளில் முக்கியமனவரானார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிதியம் பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவு சங்க அங்கத்தவருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி மணல் ஏற்றி இறக்கும் தொழில் வழங்கி இருந்தார்.

அதற்காக ஒவ்வொரு அங்கத்தவர்களும் 5 ஆயிரம் ரூபாய் வைப்பு பணம் செலுத்த வேண்டும் எனவும் ஒவ்வொரு சேவைக்கும் 3௦௦ ரூபாய் செலுத்த வேண்டும். அப் பணம் தொழில் பெறுநர் சேமிப்பு பணம் எனவும் கூறி 2010 – 2013ம் கால பகுதியில் 575 பாரவூர்தி உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டனர் வைப்பு பணமும் தொழில் பெறுநர் சேமிப்பு பணமும் தொழிலில் இருந்து விலகும் போது மீள கையளிக்கப்படும் என கடித மூலம் உறுதி வழங்கியே பெற்றுக்கொண்டனர்.

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கு யாழ். மாவட்ட பரவூர்த்திகள் சங்கத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளைப் பயங்கரவாத ஒழிப்பு எனக் கூறி அதனை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா குழுமீதான விசாரணை ஊழல் குற்ற விசாரணைக்கு அப்பால் செல்லவேண்டும். மகிந்த சாம்ராஜியத்தின் குறுநில மன்னன் டக்ளசிற்கு எதிராக தேசியப் பிழைப்புவாதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கத் தவறிய நிலையில் சாமானிய மக்களின் குரல் பாராட்டுதல்களுக்கு உரியது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top