நேபாள நிலநடுக்கம்: அமெரிக்க மீட்பு ஹெலிகாப்டர் மாயம்!

201505131029239236_Search-continues-for-US-helicopter-missing-in-Nepal_SECVPFநேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து அங்கு அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகி உள்ளது. அதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இமயமலை நாடான நேபாளத்தை இயற்கை நேற்று மீண்டும் சோதித்தது. கடந்த மாதம் 25-ந் தேதி, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலிகொண்டு, பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டமாக்கி, ருத்ரதாண்டவமாடிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் சுவடுகள் கூட இன்னும் மறையவில்லை. ஆனால் அதற்குள் நேற்றும் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு தன்கைவரிசையை காட்டியது.

இந்த நிலநடுக்கம், எவரெஸ்ட் சிகரத்தின் அருகே நாம்சே பஜார் நகருக்கு 68 கி.மீ. தொலைவில், பூமிக்கு அடியில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாக பதிவானதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் 7.3 புள்ளிகள் என அமெரிக்க பூகோள ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 6 முறை பலத்த அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் தலைநகர் காட்மாண்டுவுக்கு கிழக்கே அமைந்துள்ள, சிந்துபால்சவுக் மாவட்டம் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளானது. இங்கு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நேபாளத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு மீண்டும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று, நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு ஏற்கனவே மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்காவின் ஹெலிகாப்டர் ஒன்று மாயமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவும் அதனை உறுதிசெய்து உள்ளது. மாரினே ஹெலிகாப்டர் சாரிகோட் பகுதியில் சென்றபோது மாயமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் 8 பேர் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேபாளத்தில் 300- அமெரிக்க மீட்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாயமான ஹெலிகாப்டரை, அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த மற்ற ஹெலிகாப்டர்கள் மூலம் தேடப்பட்டு வருகிறது என்று செய்திகள் வெளியாகி உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top