மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் முர்ரே

Andy Murray மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெய்னில் உள்ள மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு ஆண்கள் ஒற்றையருக்கு இறுதி போட்டி நடைபெற்றது. இதில் களிமண் தரையில் ஜாம்பவானாக திகழும் நடால், பிரிட்டனின் ஆண்டி முர்ரேவுடன் மோதினார்.

இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முர்ரே 6-3, 6-2 என எளிதில் நடாலை வீழத்தி சாம்பியன் பட்டம் வென்றார். 7 முறை களிமண் தரையில் நடாலுடன் மோதியுள்ள முர்ரேவுக்கு முதல் வெற்றி இதுவாகும். மேலும், 27-வயதாகும் முர்ரே களிமண் தரையில் சாம்பியன் பட்டத்தை வெல்வதும் இதுவே முதல் முறையாகும்.

4 முறை மாட்ரிட் ஓபன் பட்டத்தை வென்ற நடால், ஐந்தாவது முறையாக கைப்பற்றி சாதனைப் படைக்க துடித்த அவரது எண்ணம் வீணானது. கடந்த சில மாதங்களாக நடாலின் ஆட்டத்தில் வேகம் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top