சென்னை சூப்பர் கிங்ஸ் 8–வது வெற்றி பெறுமா?: ராஜஸ்தானுடன் இன்று மோதல்

3494cc67-1eb8-47b9-b171-75e6237c90e3_S_secvpfசேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டியின் கடைசி ‘லீக்’ ஆட்டம் இன்று நடக்கிறது.

இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். சென்னை அணி 11 ஆட்டத்தில் 7 வெற்றி 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

ராஜஸ்தானை வீழ்த்தி 8–வது வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சேப்பாக்கத்தில் இதுவரை நடந்த 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆட்டத்தில் (டெல்லி, ஐதராபாத், பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர்) வெற்றி பெற்றது. கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் போராடி தோற்றது. சென்னை அணி ஏற்கனவே ராஜஸ்தானிடம் தோற்றதால் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்தது என்பதால் சென்னைக்கு சவாலாக இருக்கும்.

சென்னை அணியின் தொடக்க ஜோடியான மெக்கல்லம்–சுமித் ஜோடி கடந்த சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை. அவர்களது அதிரடியை பொறுத்துதான் ரன் குவிப்பு இருக்கிறது. இதே போல ரெய்னா, டுபெலிசிஸ் ஆகியோரும் அபாரமான திறமையை வெளிப்படுத்துவது அவசியம். மிகப்பெரிய ஸ்கோரை எடுத்தால்தான் ராஜஸ்தானை சாய்க்க இயலும்.

அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களான நெக்ரா, பிராவோ தொடர்ந்து நேர்த்தியுடன் பந்து வீசினால்தான் சாதிக்க இயலும். உள்ளூர் ரசிகர்களை ஆதரவை சாதகமாக பயன்படுத்தி சேப்பாக்கத்தில் வெற்றியுடன் முடிக்க சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வத்துடன் உள்ளது.

ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும் 14 புள்ளியுடன் (12 ஆட்டம்) உள்ளது. சென்னையை மீண்டும் வீழ்த்தி 8–வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் அந்த அணி திகழ்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ரகானே 438 ரன்கள் குவித்து முன்னிலையில் உள்ளார். கேப்டன் வாட்சன், ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளும் சமபலமானது என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top