பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாக இல்லை: தலைமை நீதிபதி

dattuபெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனை போதுமானதாக இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கவலை தெரிவித்துள்ளார்.

பெண்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்குகளில், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என நீதித்துறையை அவர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு விதிக்கப்படும் தண்டனை, அத்தகைய செயலில் யாரும் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தத்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.

புனேவில் கடந்த 2007ஆம் ஆண்டு, அயல் பணி சேவை நிறுவன பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கார் ஓட்டுநருக்கும், அவரது நண்பருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த போது தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து இவ்வாறு குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top