குஜராத்தில் இன்று காலை இருமுறை லேசான நிலநடுக்கம்

Earthquakeகுஜராத் மாநிலத்தில் இன்று காலை இரு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கட்ச் மாவட்டம் பச்சாவு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் வடமேற்கு தொலைவில் காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது.

இதைத் தொடர்ந்து அதே பகுதியில் 7 மணி 47 நிமிடத்திற்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோளில் 2 ஆக பதிவானது. உயரமான கட்டடங்கள் குலுங்கியதால், அவற்றில் இருந்த மக்கள் அவசர அவசர அங்கிருந்து வெளியேறினர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top