தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்: திருமாவளவன்

thirumavalavanபுதுவை பல்கலைக்கழக ஊழியர் சங்க சார்பில் அம்பேத்கரின் 125–வது பிறந்தநாள் விழா மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு சர்வதேச கருத்தரங்கம் பல்கலைகழகத்தில் நடந்தது.

கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் 1977–ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை மாற்றிவிட்டு கூட்டணி ஆட்சியை ஜனதா கட்சி ஏற்படுத்தியது. அதனால்தான் மத்தியில் கூட்டணி அரசு அமையும் நிலை உருவானது. அதன்மூலம், மிகவும் பின்தங்கிய மக்களின் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் ஆட்சியில் அமரும் சூழ்நிலை உருவானது.

அதுபோல தமிழகத்திலும் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்பது விடுதலை சிறுத்தை கட்சியின் விருப்பம். விரைவில் தோழமை கட்சித்தலைவர்களை சந்தித்துப்பேச உள்ளோம்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

முன்னதாக அவர் கருத்தரங்கில் பேசும்போது, ‘அனைவருக்கும் அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதே அம்பேத்கரின் சிந்தனை. அம்பேத்கர் சிந்தனைகளை இளைய சமுதாயத்தினருக்கும் போதிக்க வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அம்பேத்கர் கருத்தியலை போதிக்கும் மையத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top