அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்

anna_univசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள மையங்களில் வரும் 29ஆம் தேதி வரையும்,பிற மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதிவரையும் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை அனுப்ப வரும் 29ஆம் தேதி கடைசி நாள். விண்ணப்பக் கட்டணங்கள் பொது பிரிவினருக்கு 500 ரூபாயாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 250 ரூபாயாகவும் வசூலிக்கப்படுகிறது.ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top