பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

Earthquakeபபுவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பபுவா நியூ கினியாவின் ராபால் நகரில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராபால் நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டபோதிலும், மிகப் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top