பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் திட்டம்?

58e0d6ce-c610-4d75-a5bb-25e3b52837a3_S_secvpfபொருட்களை பொட்டலம் போட பயன்படுத்தும் பல அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என, உத்தரகாண்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனுவுக்கு எதிராக ‘ஊப்லெக்ஸ்’ பிளாஸ்டிக் நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவில் ‘எடை, போக்குவரத்து செலவு மற்றும் பல்வேறு காரணங்களால் பல அடுக்குகளை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது’ என்று கூறப்பட்டு இருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்த பிளாஸ்டிக்கை குறைந்த மாசு ஏற்படுத்தும் பசுமைப்பிரிவில் சேர்த்திருந்தது எனக்கூறியுள்ள அந்த நிறுவனம், இது மறுசுழற்சி தன்மை கொண்டது என்றும் கூறியிருந்தது. இந்த பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பொட்டலம் போட பயன்படுத்தும் காகிதம் மற்றும் அலுமினிய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகும் என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

எனினும் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் யோசித்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பான விசாரணை 7 மற்றும் 8-ந்தேதிகளில் நடைபெறுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top