ஐபிஎல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள்

CSK RCB_BCCIஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சேப்பாக்கத்தில் மாலை 4 மணிக்குத் தொடங்கும் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

நடப்புத் தொடரில் சென்னையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில், பெங்களூரு அணி உள்ளது. கடைசி 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் சென்னை அணி 10 போட்டிகளிலும், பெங்களூரு அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.

ஈடன் கார்டனில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இரு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 3 ஆட்டங்களிலும், ஐதராபாத் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top