நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

a6850298-a7c7-4619-a4a8-bd0f365bd505_S_secvpfநேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

பூகம்பம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய வெளிநாட்டவர் உள்பட 50 பேரின் சடலங்களை மீட்பு படையினர் சனிக்கிழயைமன்று மீட்டுள்ளனர். ரசுவா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டதாக துணை காவல் கண்காணிப்பாளரான ப்ரவீன் பொகாரெல் கூறியுள்ளார்.

பலியான 50 பேரை தவிர அப்பகுதியை சேர்ந்த மேலும் 200 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் மீட்பு குழுவை அனுப்பி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே இந்நிலநடுக்கம் காரணமாக இதுவரை 7040 பேர் மரணமடைந்ததுடன், 14123 பேர் காயமடைந்துள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top