மோடி ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல நடுத்தரவாசிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்: ராகுல் காந்தி

201505021533433397_Rahul-attacks-govt-on-real-estate-bill-calls-it_SECVPFமோடி ஆட்சியில் இந்தியாவில் விவசாயிகள் மட்டும் அல்லாமல் நடுத்தரவாசிகளும் அதிகமாக பாதிக்கபட்டுள்ளனர் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

டெல்லியில் வீடு வாங்கும் நடுத்தர வர்க்க மக்களை காங்., துணைத் தலைவர் ராகுல் இன்று சந்தித்து பேசினார் அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வீடு வாங்குவதில் உள்ள சிக்கல் நீக்க வேண்டும் பாரதீய ஜனதா அரசு கொண்டு வரும் ரியல் எஸ்டேட் சட்ட திருத்த மசோதா நடுத்தர மக்களை நசுக்குவதாக உள்ளது.ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்கு படுத்த காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்ட திருத்ததை மோடி அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

பழங்குடியினருக்கும் விவசாயித்திற்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மத்திய அரசு எதிராக செயல்படுகிறது.பழங்குடியினருக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் இவ்வாறு ராகுல் காந்தி தெரித்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top